பாரிஸ் லாச்சப்பலில் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வர்த்தக நிலையங்களின் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு பொறிக்கப்பட்ட கொடிகள், கறுப்பு பலூன்கள் கட்டப்பட்டுள்ளன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்தக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
நாளை மே 18 திங்கட்கிழமை மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பிரான்சு செவ்ரோன் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் அமைந்துள்ள இடத்தில் காலை 9.30 மணிக்கும் கிளிச்சியில் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் காலை 11 மணிக்கும் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படும்.
காலம் : நாளை 18.05.2015 திங்கட்கிழமை
நேரம்: பேரணி ஆரம்பம் 14:00 மணிக்கு
இடம் : Place de la Chapelle Metro: La Chapelle- Gare de Nord ligne 2-4-5
RER: B-D Gare de Nord
நினைவு வணக்க நிகழ்வு
காலம் : 18.05.2015
நேரம்: 16h30 மணிக்கு
இடம் : Place de la République Metro : République ligne 5-8-9-11