பிரான்சில் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் எனும் ஓர் அமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. கடந்த 23.12.2019 திங்கட்கிழமை Bobigny பகுதியில் குறித்த அமைப்பின் முதலாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மருத்துவர் திரு. சிவசூரியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ள இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர். இந்தச் சங்கத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள், கைவினைஞர்கள், தாராளவாத தொழில்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்கள் அல்லது பிற சுய தொழில் செய்பவர்கள் போன்றவர்களை ஒருங்கிணைப்பதே இதன்நோக்கமாகும்.