பிரான்சில் இன்று டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் நாளில் 21வது நாளாகத் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

0
561

இன்று டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் நாளில் அனைத்து நிலக்கீழ்த் தொடருந்துகளும் தடைப்படுகின்றன. 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க நிலக்கீழ்த் தொடருந்துகளும் தானியங்கி சேவை என்பதால் தடையின்றி பயணிக்கின்றன.

மீதமான அனைத்து நிலக்கீழ்த் தொடருந்துகளும் முற்றாக தடைப்படுகின்றன. பேருந்துக்களில் நான்கில் மூன்று பேருந்துகள் இயங்குகின்றன. Orlybus, Orlyval மற்றும் Roissybus ஆகியவை தடையின்றி பயணிக்கின்றன. ட்ராம் சேவைகளில் T2, T3a, T5, T6, T7, T8 மற்றும் T11 ஆகியவை தடையின்றி பயணிக்கின்றன. T1, T3b மற்றும் T4 சிறிதளவு தடையைச் சந்திக்கின்றன.

RER A காலை 8:30 மணியின் பின்னரே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Nation மற்றும் Chessy Marne-la-Vallée நிலையங்களுக்கிடையே சில மணிநேரம் பயணிக்கும். மீதமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும். RER B சேவைகள் நண்பகல் 12 மணி முதல் சேவைகள் ஆரம்பிக்கும். அதிலும் மூன்றில் ஒரு சேவை மாத்திரமே இயங்கும். RER B பயணிக்கும் நிலையங்களில் பல மூடப்பட உள்ளன. RER C சேவைகள் 13:00 மணிக்கு ஆரம்பமாகும். சராசரியாக ஒரு மணிநேரத்துக்கு இரண்டு என இயங்கும். RER D இரண்டு திசைச் சேவைகளிலும் சராசரியாக மூன்றில் ஒன்று இயங்கும். RER E சேவைகள் 14:30 மணியில் இருந்து 18:30 வரை மாத்திரம் சில நிலையங்களுக்கிடையே பயணிக்கும். Transilien சேவைகளில் Ligne U முற்றாக தடைப்பட உள்ளன. மீதமான சேவைகளில் இரண்டில் இரண்டில் ஒன்று சராசரியாக இயங்க உள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here