தமிழர் தாயகமெங்கும் எமது மண்வளம் சுரண்டப்படுவதை எதிர்த்து அமைதிமுறையிலான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் பிற்பகல் 4 மணிக்கு நடைபெற உள்ளது.
Dry Zone Development Foundation இன் தலைவர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் கட்சி பேதமின்றி இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும் தாய் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று எம் தாய்மண்ணைப் பாதுகாக்கவேண்டியமையும் எம் ஒவ்வொருவரதும் கடமை ஆகும்.
ஆகவே, இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஒழுங்கமைப்பாளர் கேட்டுள்ளார்.