வரும் வியாழன் சூரிய கிரகணம்: பாதிப்பைத் தவிருங்கள்!

0
258

எதிர்வருகின்ற சூரிய கிரகண நாளில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26.12.2019 வியாழக்கிழமை சூரிய கிரகணம் இடம்பெற இருக்கின்றது. தாயக நேரப்படி காலை 08.09 மணிமுதல் பகல் 11.22 மணிவரையுள்ள காலப் பகுதிகளில் இது இடம்பெறும்.

இலங்கையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும். அன்றைய தினம் காலை பூசைகள் 8 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். பின்னர் காலை 8.05 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்குப் பின்னர் பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.

எனவே இதற்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஆலயங்களில் எவ்விதமான வழிபாடுகளும் இடம்பெறமாட்டாது. இந்தக் கிரகண காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் சூரியனில் இருந்து வரும் செவ்வூதாக் கதிர்களால் நஞ்சாகும் தன்மை உடையன. அதனால் அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். அவ்வாறு உணவுகள் இருந்தால் அவற்றைத் தர்ப்பைப் புல்லினால் மூடி வையுங்கள். அதன் பின்னர் அவற்றைப் பாவிக்கலாம்.

வெற்றுக் கண்ணினால் சூரியனை இக்காலப் பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்க்கவும். ஈரத்துணி கொண்டு பார்க்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலப் பகுதிகளில் வெளியில் செல்வதையோ அல்லது சூரிய கிரகணத்தினைப் பார்ப்பதனையோ தவிர்க்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here