வாழைச்சேனையில் தொடரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி!

0
402

சந்திவெளி, திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதைக்கான இயந்திரம் பழுதாகிய நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையால் மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

சந்திவெளி, திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதைக்கான் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததையடுத்து மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டு நீர்வழிப்பாதை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழமையான தூரத்தை விட ஆறு மடங்கு அதிகமான தூரத்திற்கு தற்போது நீர்வழிப் பயணம் காணப்படுகின்றது. அதேவேளை மக்களுக்கான போக்குவரத்து சேவை இலவசமாக நடாத்தப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திவெளி, திகிலிவெட்டை பகுதிகளில் அதிகமான வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here