யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கில் மண் கொள்ளையை தடுத்து கொள்ளையர்களை மக்கள் துரத்தியடித்த .சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அப் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து மிகவும் முன் மாதிரியான செயலைச் செய்துள்ளனர், இவர்களுக்கு பக்கபலமாக பெரியவர்களும் களத்தில் நின்றிருந்தமை மிகவும் உந்து சக்தியான விடயமாக இருந்ததுடன் பெருமையானதாகவும் இருந்தது.
குடத்தனை வடக்குப் பகுதியில் கடந் ஒரு வாரமாக மணல் அகழ்வு மிக மோசமாக இடம்பெற்று வருகிறது,
இந்த நிலையில் இன்று பகல் வேளையிலும் மணல் அகழ்வில் ஈடுபட்டு டிப்பர் வாகனங்களில் கடத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக அப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு துரத்தியடித்துள்ளனர்.
பின்னர் குறித்த மணற்க் கும்பிகளை இளைஞர்கள் தட்டி நிரவியுள்ளனர்.