மன்னாரில் மணல் அகழ்வு தீவிரம்: பொலிஸார் – பொது மக்கள் இடையே மோதல்!

0
854

மன்னார் தோட்டவெளி பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. பொலிசாரின் உடையுடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பல தடவை முறையிட்டுள்ளனர். எனினும் பொலிஸார் கண்டுகொள்ளாததினால் பங்குத்தந்தை உட்பட மக்கள் பொலிஸாருடன் பேச்சு நடத்தியபோது சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாக அமைதியின்மை ஏற்பட்டதால் பதற்றமான நிலையாக காணப்பட்டது. எனினும் இறுதியில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க பொலிஸார் வழங்கிய வாக்குறுதியை அடுத்து நிலைமை வழமைக்கு திரும்பியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here