யாழ். குடாநாடு தனித்தீவாகும் அபாயம்: ஐங்கரநேசன் எச்சரிக்கை!

0
332

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் யாழ். குடாநாடு தனித்தீவாகும் அபாயமும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய வட மாகாண முன்னாள் அமைச்சர் பொ. ஐங்கரநேசன்,

“ பூமி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு பல கடல் நீரேரிகளைக் கொண்டுள்ளதால் குடாநாட்டுக்குள் கடல்நீர் புகும் அபாயம் இருக்கிறது.

இதனால், ஆனையிறவுப் பகுதியில் துண்டிக்கப்பட்டு குடாநாடு தனித்தீவாகும் எனவும் சூழலியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது, நான் முந்தி நீ முந்தி என்று மணல் மாஃபியாக்களால் மணற்கொள்ளை கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்து யாழ். குடாநாடு தனித்தீவாகும் அபாயம் மேலும் அதிகரித்திருக்கிறது.

மணல் அபிவிருத்திக்குத் தேவையான வளம் மாத்திரம் அல்ல் நிலத்தடியில் நன்னீரைத் தக்கவைப்பதிலும் மணல் பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது.

மணல் மேடுகள் குறையக் குறைய நிலத்தடி நன்னீரின் அளவும் குறைந்து அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கின்றது.

போரில் ஏற்கனவே பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்த எமக்கு மணல் ஏற்றும் வாகனங்களுக்கான அனுமதித் தடை நீக்கம் இப்படிப் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவுள்ளது.

அரசாங்கம் உடனடியாக மீளவும் மணல் ஏற்றுகின்ற வாகனங்களுக்கான அனுமதியைக் கட்டாயமாக்குவதோடு சட்டவிரோத மணல் அகழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம் விரைவில் மாகாணம் தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here