யாழ்.மத்திய பேருந்து நிலைய விபத்தில் படுகாயமடைந்த நபர் மரணம்!

0
765

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் நேற்று (17) காயமடைந்த நபர், சிகிச்சைப் பலனின்றி இன்று (18) புதன்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய குறித்த நபர், நேற்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் அலைந்து திரிந்த போது யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் மோதி குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகி உள்ளார் .

அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் எதுவும் அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here