இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியுள்ள தமிழீழ உதைபந்தாட்ட அணி!

0
250

கிழக்கு துர்கிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய தமிழீழ உதைபந்தாட்ட அணி, 5க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி,CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான இறுதிச்சுற்றுக்கான தேர்வுப் போட்டிக்கு தேர்வாகியது.

கடந்த சனிக்கிழமை பிரான்சில் இடம்பெற்றிருந்த போட்டியின் வெற்றியுடன் 2020ஆம் ஆண்டு மசடோனியாவில் இடம்பெற இருக்கின்ற இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, இத்தாலி என புலம்பெயர் தேசங்களில் இருந்து இளையோர்கள் தமிழர் தேசத்தை பிரதிபலித்து , தமிழீழ உதைபந்தாட்ட அணியாக ஒருங்கிணைத்திருந்தனர்.

2013ம் ஆண்டு தோற்றம் பெற்ற CONIFA Confederation of Independent Football அமைப்பானது அரசுகளற்ற இனங்களுக்கு, உலக சிறுபான்மை தேசிய இனக்குழுமங்களுக்கும் என உலக எல்லைகளைக் கடந்த வகையில் ஆடுகளத்தினை உருவாக்கி அனைத்துலக கிண்ணத்துக்கான போட்டிகளை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here