காங்கோ கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தும் கவலைக்கிடமாகவும் உள்ளனர்.
இது பற்றி காங்கோவில் இயங்கும் மனித உரிமை அமைப்பினர் கூறும்போது, “காங்கோவில் எபோலா தாக்கம் அதிகமுள்ள பகுதியான பெனி நகரில் கிளர்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் தீவிரவாதத் தாக்குதலை நடத்தினர். இதில் பலர் 43 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் வீடு வீடாகச் சென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய வைரஸான எபோலா வைரஸ் தாக்குதலில் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோவின் வடக்கு மற்றும் தென் பகுதியில் காங்கோ அரசுக்கு எதிராகப் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக 1996 – 2003 ஆம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.