உழவு இயந்திரத்தில் இன்று இரவு 08.00 மணியளவில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் மயிலம்பவெளியை சேர்ந்த நடேஸ் சஞ்சை எனும் 17 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.
இது தொடர்பாகத் தெரியவருவதாவது உழவு இயந்திரம் ஓடும் போது பெட்டியினுள் இருந்து இரு இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர், அப்போது ஒருவர் கீழே விழ நேரும்போது, மற்றவரை உதவிக்கு நாடியதாகவும், பின்னர் இருவரும் பெட்டியினுள் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
அதில் உயிரிழந்த சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லினுள் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, மற்றைய இளைஞர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார், என தெரியவருகிறது.
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.