பிரான்சில் 13 ஆவது நாளாகத் தொடரும் பணிப்புறக்கணிப்பால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை தொழில் அமைப்புக்கள் பேரணியாகச் சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. விபரீதம் நடைபெறுவதைத் தவிர்ப்பதற்காக அனைவரும் காவல்துறையினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இன்று கடந்த நாட்களை விட மிகவும் குறைந்தளவு போக்குவரத்துக்கள் மட்டுமே ஆங்காங்கே இடம்பெற்றதைக் காணமுடிந்தது.