தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

0
166

TNPFதமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை தொடர்பினில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கையினில் கடந்த 11 ம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு தொடர்பான அனுமதி கோரி எம்மால் முல்லைதீவு காவல் நிலையத்தினில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையினில் முல்லைதீவு நீதவான் நீதிமன்றம் தடை பெற்று அதனை பொலிஸார் இன்று ஒப்படைத்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை வரை விடுமுறை நாள்காரணமாக மேன்முறையீடு செய்து நீதிமன்ற அனுமதியினை பெறமுடியாத இக்கட்டான நிலை முன்னணியினரிற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசு உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த தடையில்லையென அறிவித்துவிட்டு நீதிமன்றினூடாக தடைபெற்றுள்ளமை அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
blogger-image--1985109853

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here