பிரான்சு சுவாசிலே று வா என்னும் பிரதேசத்தில் ‘தமிழ் மக்களுக்கான நான்கு மணிநேரம்” என்ற தலைப்பில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு கடந்த 14.12.2019 சனிக்கிழமை தேசத்தின் குரல் பாலா அண்ணனின் 13 ஆவது ஆண்டிலே நடைபெற்றது.
நிகழ்வில் சுவாசிலே றூவா மாணவர்கள், வந்திருந்த பல்லின மக்களுக்காக 15 நிமிடங்களில் ஈழத்தமிழ் மக்களின் 71 வருடகால அடிப்படைப் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகத் தந்திருந்தார்கள். தமிழர் தரப்பில் பல்வேறு இடங்களில் தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் பங்கெடுத்தனர். காத்திரமான இந்த அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்த சுவாசிலே றூவா பிராங்கோ தமிழச்சங்கத்தினருக்கும், மாநகர முதல்வர் மற்றும் ஆர்வலர்கள் பரப்புரையாளர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.