பிரான்சில் 10 ஆவது நாளாக தொழிற் சங்கங்களின் பணிப்புறக்கணிப்புத் தொடர்கின்றது. அத்தோடு சீரற்ற காலநிலையும் மக்களைச் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்றினால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் கடும் மழையும் பெய்து வருகின்றது. பல மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.