கிளிநொச்சி – பளை, கரந்தாய் சந்தியில் இன்று (வெள்ளிக்கிழமை ) மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் உந்துருளி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மாமுனையைச் சேர்ந்த குணசீலன் பிரேம்குமார் (பிறேம் – வயது 26) மற்றும் ரவீந்திரராசா ரவீந்திரகுமார் (ரஞ்சி – வயது 34) ஆகிய இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.