வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மணல் வளம் கொள்ளைடிக்ப்படுகிறது, குறிப்பாக குடாரப்பு பகுதியில் மிக மோசமாக நாசம் செய்யப்படுகிறது.
பக்கோ இயந்திரம் மூலமாக டிப்பர் போன்ற நூற்றுக் கணக்கான வாகனங்களில் ஏற்றப்படும் மணல் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது.
அப்பகுதி மக்களால் பொலிசாருக்கு முறையிட்டும் நடவடிக்கை இல்லை, இதனால் மக்கள் களத்தில் இறங்கினர்.
இதன் விளைவாக மக்கள் பிரதி நிதிகள் , பிரதேச செயலர் பொலிசாரும் களத்திற்கு விரைந்தனர்.
இவர்களைக் கண்டவுடன் கடத்தல் கும்பல் ஓடி ஒளித்தனர் , ஆனாலும் ஏனைய இடங்களில் எந்த தடைகளும் இன்றி மண் அகழ்வு மற்றும் கடத்தல் இது வரை நின்றபாடில்லை.