நாடு முழுவதும் பரவும் இன்புளுவன்சா வைரஸ்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

0
571

இன்புளுவன்சா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவிவருகின்றது சுகாதார அமைச்சு எச்சரிக்கை 2019-12-11 11:50:17 இன்புளுவன்சா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐனுர் காய்ச்சல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவிக்கையில் தற்பொழுது கூடுதலாக பரவி வருவது இன்புளு வன்சா டீ என்ற வைரஸ் ஆகும். இது உட்புகுந்தால் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இது தொடர்பான அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here