இன்று வியாழக்கிழமை மீண்டும் போக்குவரத்து தடைப்பட உள்ளன. பிரதமர் எத்துவார் பிலிப்பின் புதிய சலுகைகள் தொழிற்சங்க ஊழியர்களை திருப்தி படுத்தாத நிலையில், மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு அழைத்துள்ளனர். இன்று டிசம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன. 2, 3, 3bis, 5, 6, 7bis, 10, 11, 12 மற்றும் 13 மெற்றோக்கள் முற்றாக தடைப்பட உள்ளன.
தவிர, இரண்டில் ஒரு RER A சேவையும், மூன்றில் ஒரு RER B சேவையும் இயங்கும். இன்று புதன்கிழமை காலை கார்-து-நோர் நிலையத்தில் RER B தொடருந்துக்காக பயணிகளிடையே மோதல் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நாளையும் RER B தடைப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.