பிரான்சில் இன்று புதன்கிழமை தொடர்ச்சியாக ஏழாவது நாளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, இல்-து-பிரான்சுக்குள் தனியார் பேருந்துகள் 220 இயக்கப்பட்டுள்ளன. “குறைந்த அளவான சேவைகளாவது கொண்டுவரும் முயற்சி” என மாகாண முதல்வரும் இல்-து-பிரான்ஸ் போக்குவரத்து துறை அதிகாரியுமான Valérie Pécresse அறிவித்துள்ளார்.
இல்-து-பிரான்சுக்குள் தடைப்பட்டுள்ள பல்வேறு தொடருந்து போக்குவரத்தினை ஈடு செய்ய இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், நவிகோ பயனாளர்களுக்கு எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டச்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆயினும் மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருந்தே பயணத்தை மேற்கொண்டு வருவதைக் காணமுடிந்தது.
பல பகுதிகளில் தொடருந்துகளைப் பிடிப்பதற்கு சண்டையில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது.