இன்று செவ்வாய்க்கிழமை, தொடர்ச்சியாக ஆறாவது நாளாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஆறாவது நாளாக இன்றும் தொடர உள்ளது.
RER A மற்றும் B ஆகிய சேவைகள் காலை 6:30 இல் இருந்து 9:30 வரையும், மாலை 16:30 இல் இருந்து 19:30 வரையுமான நேரத்துக்குள் மூன்றில் ஒரு தொடருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RER C மற்றும் D ஆகிய சேவைகள் குறிப்பிட்ட சில நிலையங்களுக்கு மாத்திரம் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று எனும் கணக்கில் பயணிக்கும்.
மெற்றோக்களில் வழக்கம் போல் 1 ஆம் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் தடை இன்றி இயங்கும். 4 ஆம் 7 ஆம் இலக்க மெற்றோக்கள் நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒன்று இயங்கும் 2 , 3 , 3bis , 5 , 6 , 7bis , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் இலக்க மெற்றோக்கள் முற்றாக தடைப்படுகின்றன.
ட்ராம் சேவைகளில் T2 , T6 , T8 ஆகியவை நாள் முழுவதும் நான்கில் மூன்று சேவைகள் இடம்பெறும். T3a மற்றும் T3b ஆகிய சேவைகள் காலை 11:30 மணியில் இருந்து 13:00 மணிவரை முற்றாக தடைப்படும். மீதமான நேரத்தில் மூன்றில் ஒரு சேவை இயங்கும். T5 மற்றும் T7 ஆகிய மெற்றோக்கள் 22:00 மணிவரை மூன்றில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.