பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லாக்கூர்னோவ் தமிழ்ச்சோலைப் பள்ளியின் 17 ஆவது ஆண்டு விழா!

0
1113

பிரான்சு லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 17 ஆவது ஆண்டு விழா நேற்று 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பிரான்சின் தேசியப் பண், தமிழ்ச்சோலைப் பண் என்பன இசைக்கப்பட்டன.

வரவேற்பு நடனத்துடன் மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆரம்பித்தன. வரவேற்புரையினை திருமதி நே.சிவகுமாரி அவர்களும் தலைமையுரையினை திரு.அ.புவனேஸ்வரராஜா (தலைவர்) அவர்களும் சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் ஆற்றியிருந்தனர். லாக்கூர்நொவ் நகரபிதா அவர்களும் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்கள் பொன்னாடைபோர்த்தி மதிப்பளிப்புச் செய்திருந்தார். தொடர்ந்து நகரபிதா மாணவர்களுக்கு மதிப்பளிப்பையும் மேற்கொண்டிருந்தார். அபிநயப்பாடல், நாடகங்கள், பரதநாட்டியம், நாட்டிய நாடகங்கள், வாய்ப்பாட்டு, மதிப்பளிப்புகள், பிரெஞ்சு நாடகம், வயலின், தண்ணுமை, சுரத்தட்டு, எழுச்சி நடனங்கள், வில்லுப்பாட்டு, விவாத அரங்கு என அனைத்து நிகழ்வுகளையும் மாணவர்கள் திறமையாக வெளிப்படுத்தியிருந்தனர். நன்றியுரையினை லாக்கூர்னோவ் தமிழ்சங்கத்தின் செயலாளர் திரு.செ.செல்வக்குமார் அவர்கள் ஆற்றியிருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்துநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here