பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சோலைப் பள்ளியின் 17 வது ஆண்டுவிழாவில் தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிக்கப்பட்டது.
மக்களின் உடனடி நிதிப் பங்களிப்பில் தாயகப் பெறுமதியில் ஒரு லட்சம் ரூபா சேகரிக்கப்பட்டது. இப்பணம் உடனடியாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள அதேநேரம், பிரான்சில் ஏனைய பகுதிகளில் இன்று நடைபெறும் நிகழ்வுகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டால், சிறுதுளி பெருவெள்ளமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேர் உதவியாக அமைந்துவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.