வேகக்கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி வீதியோரம் நின்ற மாமரத்துடன் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (06) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஊர்காவற்துறை – புளியங்கூடல் பகுதியினை சேர்ந்த வி.வசீகரன் (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.