மன்னாரில் டெங்கு நோய்க்கு உட்பட்ட சிறுமி ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டார்.
மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குட்பட்ட மன்னார் நகரில் அமைந்துள்ள சின்னக்கடையில் வசிக்கும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் மூன்றாம் ஆண்டு கல்வி கற்ற மாணவியான மரியதாசன் டிவினியா (வயது – 9) என்பவரே டெங்கு நோய்க்கு உள்ளாகி இறந்தவராவார். முசலி மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற்கொண்ட விசாரணையில் இறந்த சிறுமிக்கு கடந்த 30ஆம் திகதி காய்ச்சல் வந்ததாகவும் பின் முதலாம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் மருந்து எடுக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் காய்ச்சல் விடாமையால் மீண்டும் 3ஆம் திகதி மன்னார் வைத்தியசாலை யில் சேர்ப்பித்து வைத்தியம் செய்யப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமையால் இச்சிறுமி நேற்று வியாழக்கிழமை அதிகாலை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.