காங்கேசன்துறை கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!

0
209

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் இருந்து காங்கேசன்துறை, தல்செவன கடற்பகுதிக்கு சென்றிருந்த செல்வநாயகம் அலெக்சண்டர் என்ற 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் மூன்று மாத கிறிஸ்தவ கற்கை நெறிக்காக வந்திருந்த நிலையில் கற்கை நெறி முடியும் தறுவாயில் நேற்று காங்கேசன்துறை தல்செவன கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராட சென்றிருந்த வேளையிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் காங்கேசன்துறை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் நீதவானின் வருகைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here