தெலுங்கானா பெண்மருத்துவர் கொலைக் குற்றவாளிகள் நால்வரும் பொலிசாரின் சூட்டுக்குப் பலி!

0
356

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்துக் காட்டச் செய்தனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் 4 பேரும் பொலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பொலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here