வலிகாமம் வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து விகாரை கட்டும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின் விகாரை அமைக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனி யாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப் பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இதனை சட்டரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.