தமிழ்நாட்டின் 7 வது மிகப் பெரிய நகரமாக தஞ்சாவூர் விளங்குகிறது. தஞ்சையில் கடந்த 1980களில் விமான போக்குவரத்து சேவை நடைமுறையில் இருந்தது. அந்த காலகட்டங்களில் சிறிய நகரமாக தஞ்சாவூர் இருந்ததால், விமான சேவைக்கு தஞ்சாவூரில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இந்த 40 ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக தஞ்சாவூர் வளர்ந்துள்ளது.
இங்கே தஞ்சைப் பெருங்கோயில், தஞ்சாவூர் பல்கலைக் கழகம் என்பவற்றோடு முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தஞ்சை விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் முதல் கட்டமாக விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது ஏர் டிராபிக் பணிகள் முடிவடைந்து விமான முனைய பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன், அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தஞ்சை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.