நாளை மறுதினம் 05.12.2019 வியாழக்கிழமை , 11 அணி (Metro Lignes) நிலக்கீழ் தொடருந்து சேவைகள் முற்றாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இலக்கமும் 14ம் இலக்கமும் மட்டும் சாரதியற்ற தானியங்கிச் சேவைகள் என்பதால், சனநெருக்கடியான வேலை நேரத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏனைய அனைத்து நிலக்கீழ் தொடருந்து அணிகளும் சேவைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணிகள் 2, 3, 3Bis, 5, 7bis, 8, 10, 11, 12, 13 ஆகியவை முற்றாக மூடப்படவுள்ளன.
நாளை புதன்கிழமை 19h00 மணியிலிருந்து, தொடருந்துப் போக்குவரத்து நெருக்கடிகளும், சேவைகள் இரத்துச் செய்வதும் ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5ம் திகதி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடருந்துப் போக்குவரத்துக்களை மிகவும் பாதிக்கும்
90 சதவீதமான போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
SNCF மற்றும் RATP தங்களது போக்குவரத்துச் சேவைகளின் விபரங்களை வழங்கி உள்ளனர்.
TGV – 10 இற்கு 1 மட்டும்
TER – 10 இற்கு 1 மட்டும்
TRANSILIEN – 10 இற்கு 1 மட்டும்
RER B – முக்கிய வேலை நேரத்தில் மட்டும் மணித்தியாலத்திற்கு 4 தொடருந்துகள்
மற்றைய RER சேவைகளில் 4 இற்கு 1 மட்டும்
எனவே பொதுமக்கள் இவற்றைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.