தமிழாராச்சி 4124451 கொட்டும் மழைக்கும் மத்தியில் முற்றவெளியிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுதூபி முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இன அழிப்பிற்கு உள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையினில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வினில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சுகிர்தன் மற்றும் கஜதீபன் ஆகியோருடன் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனும் பங்கெடுத்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த 12ம திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச ரீதியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் தொடர்ச்சியாகவே இன்று கொட்டும் மழைக்கும் மத்தியில் முற்றவெளியினிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டினில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுதூபி முன்னதாக முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்கு உள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது