நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு
அர்ஜொந்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரை ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. விமல்ராஜா அவர்கள் ஏற்றிவைக்க
ஈகைச்சுடரை நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் புதல்வி செல்வி ஜெயசோதி வினுயா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர்மலையை நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் திருமதி ஜெயசோதி புஸ்பலதா அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம், 95 விளையாட்டுக் கழகப் பொறுப்பளார் திரு. ரமேஸ், மாவீரர் பணிமனை சார்பாக திரு _நிதர்சன், திரு பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஆசிரியர்கள்,மாணவர்கள், அர்ஜொந்தை வாழ் மக்கள் அனைவரும் மலர் வணக்கம் சுடர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து அர்ஜொந்தை மாணவர்களின் நடனம் ,
பேச்சு- (ஆசிரியர்)பாஸ்கரன்,
திரு.ரமேஸ் (விளயாட்டுத்துறை),
நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களும் ஆற்றியிருந்தார்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு பெற்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)