பிலிப்­பைன்ஸில் பாதணி தொழிற்­சா­லையில் பாரிய தீ அனர்த்தம்; 72 பேர் உயி­ரி­ழப்பு!

0
178

289D5D7400000578-3081475-Burned_பிலிப்பைன்ஸ் தலை­ந­கரின் புற­ந­கரப் பகு­தி­யொன்­றி­லுள்ள பாதணி தொழிற்­சா­லையில் ஏற்­பட்ட இந்தத் தீ அனர்த்­தத்தில் குறைந்­தது 72 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இந்தத் தீ அனர்த்தம் கார­ண­மாக அந்தத் தொழிற்­சாலை முழு­மை­யாக அழி­வ­டைந்­துள்­ளது.

அந்த தொழிற்­சா­லையில் ஆரோக்­கிய மற்றும் பாது­காப்பு நியமத் தரா­த­ரங்கள் குறித்து உரிய கவனம் செலுத்­தப்­ப­டாது வந்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
தொழிற்­சா­லையில் இடம்­பெற்ற பொருத்து வேலையின் போது அந்த தொழிற்­சாலை வாச­லி­லி­ருந்த தீப்­பற்­றக்­ கூ­டிய இர­சா­ய­னங்கள் எரிந்­தமை கார­ண­மா­கவே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

தீ வேக­மாகப் பர­வி­யதால் தொழிற்­சா­லையில் இருந்த ஒரு சிலரே அங்­கி­ருந்து வெளி­யேறி தப்­பித்­துள்­ளனர்.
பலர் தொழிற்­சா­லை­யி­லி­ருந்த இறப்பர் மற்றும் இர­சா­ய­னங்கள் எரிந்­த­மையால் வெளிப்­பட்ட புகையால் மூச்சுத் திண­றியே உயி­ரி­ழந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் தொடர்பில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here