செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் காணாமலாக்கப்பட்டு 35-ம் ஆண்டில் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

0
978

செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

1017 ஆவது நாளாக வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரினக் உறவுகள் இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், 35 வருடங்கள் கடந்த நிலையில் 52 பேருக்கும் நடந்தது என்ன?, மாற்று தலைமை என்போரே தமிழர் பிரச்சனைக்கு ஏன் இந்தியாவை அழைக்கவில்லை, சர்வதேசமே நீதியை நிலைநாட்டு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் அவர்கள் தாங்கியிருந்தார்கள்

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் 52 தமிழர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் தலையிட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here