1984 ம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஐம்பத்திரெண்டு அப்பாவி தமிழர்களை நினைவு கூரும் 35 ஆவது நினைவேந்தல் இன்று செட்டிகுளம் பொது விளையாட்டு மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் பொது மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
செட்டிகுள பிரதேச பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் 52 பேர் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.