பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கத்தார் வரலாற்றில் முதல் முறையாக மிக அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வு பூர்வமாக எம் தேசத்தின் மைந்தர்களை நினைவு கூர்ந்து தமிழீழ மாவீரர் நாள் அனுஷ்டிக்கப் பட்டது. அதற்கு முந்தைய தினம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதுடன் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டம், மற்றும் வலைப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டது. வழமை போன்று இம் முறையும் நிகழ்வுகளை தமிழர் கலை அறிவியல் பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.