பிரான்சு நந்தியார் பகுதியில் மீண்டும் வருவோம் படைப்பகத்தின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 65 ஆவது அகவை நிறைவு தினம் நேற்று 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாடப்பட்டது..அகவணக்கத்தைத் தொடர்ந்து, கலை நிகழ்வுகள் இடம்பெற்றன, தமிழர் கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பாடல்களைப் பாடியிருந்தனர், மாவீரர் கலைத்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களின் பேச்சு, தமிழ்ச்சோலை மற்றும் நடனப் பள்ளிகளின் மாணவர்களின் சிறப்பு நடனம், கவியரங்கம், கவிதை போன்ற நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் வண்ணப்படம் தாங்கிய கட்டிகை வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். வெர்சைல் தமிழ்ச்சோலை மாணவர்களின் பறை இசை மிகவும் சிறப்பாக இருந்தது. சிறப்பு நாடகமும் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட கலைஞர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றிருந்தது. நிறைவாக நன்றியுரையினைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு Nanterre பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 65 ஆவது அகவை நிறைவு தினம்!