பிரான்ஸ் தேசத்தில் புளோமினில் நகரத்தில் தமிழீழ தேசியத்தலைவரின் அகவைப் பெருவிழா புளோமினில் வாழ் தமிழ் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர பிதாவும் அகவைப் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
என்பது பெருமையும் மகிழ்வும்….
முதன் முதலாக புளோமினில் நகரசபையின் அனுமதியைப்பெற்று ….புளோமினில் வாழ் தமிழ் மக்கள்…ஒன்றுபட்டு மிகவும் விமர்சையாக தமிழீழ தேசியத்தலைவர் மேதகு,வே.பிரபாகரன் அவர்களது 65ஆவது அகவைப் பெருவிழா கொண்டாடப்பட்டது. புளோமினில் நகர பிதா Monsieur THIERRY MEIGNEN maire du LE BLANC-MESNIL ET CONSEILLER RÉGIONAL. அவர்கள் கலந்து கொண்டதோடு இளையோர்களால் கட்டிகை (கேக்)வெட்டி நகர பிதாவுக்கு வழங்கப்பட்டது. நகர பிதாவுக்கான மதிப்பளிப்பை தொடர்ந்து.சிறிய உரையினை நிகழ்த்திய நகர பிதா எம் தேசியத் தலைவருக்கான வாழ்த்தினை முதலில் பகிர்ந்து விட்டு புளோமினில் வாழ் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் யாவும் ஒன்றுபட்டு நிற்பதை வரவேற்றதோடு எமது இளையோர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றும் எமது சமூகம் புளோமினில் நகரத்தில் சிறந்த சமூகமாகவும் பொருளாதாரம் கல்வி ஆகியவற்றில் சிறந்த சமூகம் என்றும் புகழ்ந்துரைத்தார்.அடுத்த வருட தேசியத்தலைவரின் அகவைப்பெருவிழாவுக்கு பெரிய மண்டபம் ஒன்றை ஒழுங்கு செய்வதாகவும் உறுதியளித்தார்.இதே நேரம் புளோமினில் நகர சபையின் அனைத்து சங்கங்களுக்குமான இணைப்பாளர் Mme CHRISTINE COMAYRAS. adjoint chargée de la vie associative . அவர்களும் கலந்து அகவைப்பெருவிழாவை சிறப்பித்தார். புளோமினில் வாழ் தமிழ் மக்கள் மற்றும் ஒரு சில வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்போடு பல விதமான சிற்றுண்டிகள்,இனிப்பு வகைகள் கலந்து கொண்ட மக்களுக்கும் இளையோர்களுக்கும் திருப்திகரமாக பரிமாறப்பட்டது .தேசியத்தலைவரது நிழல்படங்கள்,சிறியநாட்காட்டிகள்,வழங்கப்பட்டதோடு முதல் தடவையாக புளோமினில் நகரத்தில் இடம்பெற்ற தேசியத் தலைவரது அகவைப்பெருவிழா அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமான நிகழ்வாக மாறும் என்பது உறுதி…!