பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பாரிஸ் Place de la République பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இரண்டாவது நாளாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை பிரான்சு இளையோர் அமைப்பைச் சேர்ந்த அர்சுனன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் அனந்தனின் சகோதரி மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து மே 17 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு Place de la République பகுதியில் இடம்பெறவுள்ளது.
மே 18 திங்கட்கிழமை அன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.