யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்து கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது