அக்கரைப்பற்று, கண்ணகி கிராமம் கற்குவாரி ஒன்றின் குடிசையிலிருந்து வெட்டுக்காயங்களுடன் இளம் குடும்பஸ்தரின் சடலத்தை, அக்கரைப்பற்று பொலிஸார், இன்று (நவ29) காலை மீட்டுள்ளனர்.
சின்னப்பனங்காடு புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களாக காணாமல் போனவரை தேடிவந்த நிலையில் இன்று காலை குறித்த கற்குவாரியின் குடிசையொன்றில் வெட்டுக்காயங்களுடன் காணாமல் போனவர் சடலமாகக் கிடப்பதை கண்ட உறவினர்கள் பொலிஸாருக்கும் குறித்த பிரிவின் கிராம உத்தியோகத்தருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள், குறித்த குடிசைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது தலைப் பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட பொருள்களும் சடலத்துக்கு அருகில் காணப்பட்டன.
சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பிவைத்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.