டென்மார்க்கில் தமிழீழத்தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.
தமிழீழத்தேசிய மாவீரர் நாள் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது டென்மார்க் கிளை பொறுப்பாளரால் தமிழீழத்தேசிய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுடர்வணக்கம், மலர்வணக்கம், அகவணக்கம் நடைபெற்றது.
தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
எமது தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டது . தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, மாவீரர் நாள் மண்டபத்தில் இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.
தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.