பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது!

0
136

பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பாரிஸ் Place de la République பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு அடையாளச் சின்னத்தின் முன்பாக சுடரேற்றி ஆரம்பித்துவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில், 6 வருடங்கள் கடந்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை. நாம் போராடித்தான் எமக்கான நீதியைப்பெற்றுக்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்த அவர், வரும் மே 18 அன்று இடம்பெறும் பேரணியில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதி, மூதாளர் அமைப்புப் பிரதிநிதி ஆகியோர்  உரை நிகழ்த்தினர்.
மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து மே 17 வரை காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு Place de la République பகுதியில் இடம்பெறவுள்ளது.
மே 18 அன்று பேரணி இடம்பெறவுள்ளது.

காலம் : 18.05.2015
நேரம்: பேரணி ஆரம்பம் 14:00 மணிக்கு
இடம் : Place de la Chapelle Metro: La Chapelle- Gare de Nord ligne 2-4-5
RER: B-D Gare de Nord
நினைவு வணக்க நிகழ்வு
காலம் : 18.05.2015
நேரம்: 16h30 மணிக்கு
இடம் : Place de la République Metro : République ligne 5-8-9-11 DSCN1346DSCN1329

DSCN1328
DSCN1342
DSCN1347 DSCN1351 DSCN1352 DSCN1360 DSCN1361 DSCN1365

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here