இந்துக்களின் மதப்பாரம்பரியங்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத்திருநாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
தீபத் திருநாளன்று இரவு வேளை இந்து மக்கள் தமது வீடுகளில் கார்த்திகைத் தீபங்களை ஏற்றி தீபத்திருநாளை அனுஸ்டித்திருந்தனர்.
வீட்டு வாசல்களிலும், மதில்களிலும் சுட்டிகள் மற்றும் வாழைத் தண்டு நாட்டி தீபங்களை ஏற்றியிருந்தனர்.
இதன்போது வீதிகளில் வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்ற இராணுவத்தினர் ஏற்றப்பட்டிருந்த தீபங்களை கண்டதும் அது தொடர்பில் விசாரித்துள்ளனர்.
இச்சம்பவம் மானிப்பாய் வீதியிலுள்ள பலசரக்கு கடையயான்றில் நேற்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அக்கடைக்காரர் உங்களது வெசாக் தினத்தை போன்றுதான் இத்தீபத் திருநாளும் இந்து மதப் பாரம்பரியமுடையது என கூறியதையடுத்தே அங்கிருந்து சென்றுள்ளனர்.
தீபத்திருநாளையயாட்டி இராணுவத்தின் வழமையான ரோந்துகளை விட நேற்றைய தினம் அதிகமாகவே காணப்பட்டது என பொது மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கார்த்திகைத் தீபத்தையும் மாவீரர்களுக்கு ஏற்றப்பட்ட ஈகச்சுடர் என சந்தேகக் கண் கொண்டே இவ்வாறு இராணுவத்தினர் விசாரித்துள்ளனர் என அவர்கள் தெரிவித்த னர்.