மே 18 இல் புலிகளை நினைவு கூர முடியாது : உறவுகளை நினைவு கூரலாம் ; அரசு!

0
170

MAY-18-UNI-Jaffnaமே 18 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது. அதற்கு அனுமதியளிக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ள அரசு போரில் தமது உறவுகளை இழந்த வடக்கு மக்கள் அவர்களை நினைவுகூரலாம். இந்த நடவடிக்கை மனிதாபிமான முறையில் இடம்பெறும் என்றும் கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியிலுள்ள ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையைக் கலைத்து, நம்பிக்கையை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அரச நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு – நாரஹன்பிட்டியிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுப் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தhர். அவர், மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த பணம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிகளுடன் யார் தொடர்பு வைத்திருந்தார் என்ற தகவல்கள் வரும் காலத்தில் வெளிவரும். புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பாகும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கூட புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. போரில் தமது உறவுகளை இழந்த வடக்கு மக்கள் உறவுகளை நினைவுகூரலாம். இறந்தவர்களை நினைவுகூருவது என்பது மனிதாபிமான நடவடிக்கை ஆகும். ஆனால், விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது. வடக்குஇ கிழக்கு மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கையைப் போக்க வேண்டும். அந்த செயற்பாட்டைத்தான் அரசு தற்போது செய்து வருகின்றது.

அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மேலும் வடக்கு மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஒரு சுமூக உறவு ஏற்பட்டு வருகின்றது. சில விடயங்கள் தொடர்பாக வடக்கு மக்கள் பொலிஸுக்குச் செல்வதில்லை. இராணுவத்தினரைக் கொண்டு அவற்றை சுமூகமாக முடித்து விடுகின்றனர். இதுபோன்ற செயற்பாடுகளூடாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எமது நோக்கம்” – என்று அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here