முல்லைத்தீவு மாங்குளம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நாளை மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகியுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முழுமையான ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் உரிய நேரத்திற்கு சமுகமளித்துத் தமது உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளனர்.