புதுக்குடியிருப்பு பகுதியில் வான் மோதியதில் இளைஞன் சம்பவஇடத்திலேயே பலி!

0
185

ஹயேஸ் வான் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணிளயவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளி புனம் காளிகோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது. புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த அதிநவீன ஹயேஸ் வாகனம் ஒன்று காளி கோவிலடிப் பகுதியில் பரந்தன் நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த இளைஞனை மோதித் தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இதன்போது உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தப்பிச்சென்ற வாகனம் வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்திற்கு முன்னால் இளைஞர்களால்  மடக்கிப்பிடிக்கப்பட்டது.

இவ் விபத்தில் வள்ளிபுனம் 17 ஆம் கட்டையினை சேர்ந்த 19 வயதுடைய சந்திரன் ஜீவகுமார் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசா ரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.                    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here