பிறந்த நாள் என்றால் வண்ண வண்ண பலூன்கள் கட்டி,கேக்வெட்டி நண்பர்களுடன்,,, நிறையப் பரிசுப்பொருட்கள்!!! இப்படித்தான் குழந்தைகள் எதிர்பார்ப்பது. என் குழந்தையும் கடந்துவந்த 10வருடங்களும் அப்படித்தான் இருந்தாள்.
ஆனால் நேற்று பிறந்த நாள் அன்று அவளுக்கு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வில் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் கூட்டிக்கொண்டு போனேன்.அப்போதுதான் கேட்டேன் இந்த முறை வீட்டில் பிறந்த நாள் அன்று நிற்கவில்லை என்று கவலையா? என்று கேட்டேன். அதற்கு மகள் சொன்னாள் “எந்த ஒரு அம்மாவும் அப்பாவும் நாட்டிற்காக தங்கள் பிள்ளைகளைக் கொடுப்பாங்களா? ஆனால், நம் நாட்டிற்காக எத்தனை பிள்ளைகளை கொடுத்திருக்கின்றார்கள். அவர்களை நான் நேரில் பார்க்கவேண்டும் . அவர்கள் முன் பாடுவதுதான் எனக்குச் சந்தோஷம்” என்றாள் அவளின் அழகுத் தமிழில். மெய்சிலிர்த்துப்போனேன். உண்மையில் எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பம்?
சர்மிலா ரவி.